@@@@@ அன்ன தானம் என் செய்வது என்றால் அது மட்டுமே வாங்குபவரால் போதும் என்று சொல்லப் படுவது .

@@@@@@ அன்னதான சத்திரங்கள் ஆயிரம் அமைப்பதற்கு பதில் கல்வி சாலைகள் அமைப்பது சிறந்தது என்பார்கள்

@@@@அதைவிட கலவியை ஒருவருக்கு கற்றுக் கொடுப்பது இவ்வுலகம் கோடானு கோடி வருடம் வாழ்வதற்கு சமமானது ,

புதன், 7 ஜனவரி, 2015

தாடி-நன்மைகள்


News
ஆண்கள் தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரும புற்றுநோயைத் தடுக்கும்.
சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு தாடி பாதுகாக்கிறதாம். இதனால், தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளது.
ஆஸ்துமா, அலர்ஜிக்கு தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்கமுடிகிறது.
இளமையாக இருக்க :
தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிக குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை நீண்ட ஆண்டுகளுக்கு இளமை தோற்றத்துடனே இருக்க தாடி, தோற்றத்தை வேண்டும் கொடுக்கலாம். ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள் தான் இளந்தாரிகள்.
குளிரைத் தாங்க :
தாடி வைத்திருப்பதால் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமா இருக்குமாம்.
நோய்த் தொற்றுக்கள் குறைய :
பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம்.
குறைகளில்லா சருமத்திற்கு :
ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள்
உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும் தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும்.
இயற்கையான ஈரப்பதத்திற்கு :
தாடி வைத்திருப்பதால் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக