@@@@@ அன்ன தானம் என் செய்வது என்றால் அது மட்டுமே வாங்குபவரால் போதும் என்று சொல்லப் படுவது .

@@@@@@ அன்னதான சத்திரங்கள் ஆயிரம் அமைப்பதற்கு பதில் கல்வி சாலைகள் அமைப்பது சிறந்தது என்பார்கள்

@@@@அதைவிட கலவியை ஒருவருக்கு கற்றுக் கொடுப்பது இவ்வுலகம் கோடானு கோடி வருடம் வாழ்வதற்கு சமமானது ,

சனி, 31 ஜனவரி, 2015

முத்த அர்த்தங்கள்

முத்தங்களும் அதன் அர்த்தங்களும்....!!

உதட்டில் முத்தம் காதலர்கள் அதிகம் உதட்டில் தான் முத்தம் கொடுப்பார்கள். இப்படி உதட்டில் முத்தம் கொடுத்தால், அது நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்றுஅர்த்தமாம். 

கண்களை திறந்து முத்தம் முத்தத்தை கொடுக்கும் போது, உங்கள் துணை கண்களை திறந்து கொண்டு கொடுப்பது போல் உணர்ந்தால், அவர் உங்களை இன்னும் சந்தோஷ பட வைப்பதுடன், உங்களைஉணர்ச்சியை ரசிக்கிறார் என்று அர்த்தம். இதை பெரும்பாலும் புதியதம்பதியர்கள் தான் கொடுப்பார்கள்.

கண்களை மூடி கொடுப்பது காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்றுஅர்த்தமாம்.

கைகளில் முத்தம் கைகளில் முத்தம் கொடுத்தால், அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.

கன்னத்தில் முத்தம் கன்னத்தில் முத்தம் கொடுத்தால், உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்என்று அர்த்தமாம்.

கழுத்தில் முத்தம் அருகில் வந்து கட்டிப்பிடித்து கழுத்ததில் முத்தம் கொடுத்தால், அதற்கு நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.

கண்களில் முத்தம் கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.

நெற்றியில் முத்தம் நெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.

மூக்கில் முத்தம் மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால், நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக