@@@@@ அன்ன தானம் என் செய்வது என்றால் அது மட்டுமே வாங்குபவரால் போதும் என்று சொல்லப் படுவது .

@@@@@@ அன்னதான சத்திரங்கள் ஆயிரம் அமைப்பதற்கு பதில் கல்வி சாலைகள் அமைப்பது சிறந்தது என்பார்கள்

@@@@அதைவிட கலவியை ஒருவருக்கு கற்றுக் கொடுப்பது இவ்வுலகம் கோடானு கோடி வருடம் வாழ்வதற்கு சமமானது ,

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் பாதிப்புகள் !!!




மாதவிடாய் நிற்கும் நேரத்தில் ஏற்படும் பாதிப்புகள் !!!

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மாதவிடாய் ஏற்படுவது நின்று விடும். இது தான் மெனோபாஸ். பொதுவாக 12 மாதங்கள் கழித்து தான் இதை உறுதி செய்வார்கள்.


ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சினைகளால் 2 அல்லது 3 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்து மறுபடியும் வரலாம். சிலருக்கு ஐந்து மாதங்கள் கூட வராமல் இருக்கும். திரும்பவும் மாதாமாதம் வர ஆரம்பிக்கும். இதனால் 12 மாதங்கள் தொடர்ந்து கண்காணித்த பின்பும், 'வரவில்லை' என்றால் தான் மெனோபாஸ் என்றே முடிவு செய்ய வேண்டும்.

மெனோபாஸிற்கு பிறகு மாதவிடாய் சுத்தமாக நின்று விடுவதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு நின்று விடுகிறது. இதனால் ஆண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக், கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் இந்த வயதுக்குப் பிறகு பெண்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

இதைத்தவிர்க்க, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை செயற்கையாக சுரக்கச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் வாதம், பித்தம், கபம் ஆகிய தோஷங்கள் சமநிலை பெறும்.

மெனோபாஸ் பொதுவாக 45 வயதுக்கு மேல் வந்தாலும் பெண்களின் உடல் தன்னை அதற்கு 35 வயதிலேயே தயார்படுத்திக்கொள்கிறது. அதனால் அந்த நேரத்தில் இயல்புக்கு அதிகமாக கடினமான வேலைகளைக் குறைத்துக்கொள்வது அவசியம்.

உடல், மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது. குழந்தைப் பருவத்தில் எல்லோரது உடலிலும் கபத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இளமை நெருங்க நெருங்க பித்தத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முதுமையில் வாதத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மெனோபாஸிற்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் வாத சம்பந்தமான நோய்கள் வந்து அவதிப்படுத்தும்.

மெனோபாஸின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கைத் தடுக்க...

ஆடுதொடா இலைகள் பத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேக விட வேண்டும். வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கிச் சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாறுடன் சம பங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன், அருந்த வேண்டும்.

மெனோபாஸ் காலத்தில் சிலருக்கு உடல் சூடாகி உதிரப்போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க நன்னாரி சீந்தில் கொடி பால் கஷாயம் அருந்த வேண்டும். இந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்னாரி, சீந்தில் கொடி இவற்றில் தலா 15 கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். 100 மில்லி பால், 100 மில்லி தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாலும், தண்ணீரும் சேர்ந்து 100 மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்க வைத்து எடுக்க வேண்டும். இளஞ்சூட்டில் இந்த பாலை இரவு படுக்கும் முன்பு சாப்பிட வேண்டும்.

மெனோபாஸ் நேரத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க, மூட்டுகளில் தினமும் நல்லெண்ணை தேய்த்து மிருதுவாக மசாஜ் செய்து விட வேண்டும். தினமும் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக